28.2 C
Jaffna
Tuesday, July 7, 2020
Home Technology Apps WeTransfer சேவைக்கு புதிய ஆபத்து!

WeTransfer சேவைக்கு புதிய ஆபத்து!

மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக பகிர முடியாத மிகப்பெரிய கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer சேவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போதுள்ள லொக்டவுன் நிலையிலும் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் உட்பட பல மில்லியன் கணக்கானவர்கள் இச் சேவையைப் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் இச் சேவையை தடைசெய்யுமாறு அனைத்து இணைய சேவை வழங்குனர்களிடமும் இந்திய அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.

முறையான காரணங்கள் எதுவும் இன்றி இக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கையானது கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்தியாவின் Department of Telecommunications (DoT) இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை WeTransfer சேவையானது 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டதாகும்.

இதன் மூலம் இலவசமாக 2GB வரையான கோப்புக்களையும்,கட்டணம் செலுத்தி 20GB வரையான கோப்புக்களையும் பரிமாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்!

இன்றுவரை உலகளவில் பேசுபொருளாக உள்ள விடயம் “கொரோனா வைரஸ்” ஆக காணப்படுகின்றது. எனினும் குறித்த வைரஸை விட சீனாவில் தலைதூக்கியுள்ள பிளேக் நோய் கொரோனாவை விட அதிக நாசம் செய்யும் என்று கூறப்படுகின்றது. ஐரோப்பாவில் அதிகளவு...

நைஜீரியாவில் 4 மாத குழந்தைக்கு அடித்த அதிசயம்!

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி  என்ற பெண் எழுத்தாளர்,தொழிலதிபர்,சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு...

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்க மாட்டேன்! கிரீஸ் பிரதமர் அதிரடி

Corona virus Emergency Aid தொடர்பான கடுமையான ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்தார். கிரேக்கர்கள் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.நாங்கள் எங்கள் சொந்த சீர்திருத்தங்களைச் செய்ய விரும்புகிறோம் என்று...

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் / ரிடோனவீர் ஆகியவற்றின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட...

Recent Comments