28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News பிரதமர் மஹிந்தவின் முக்கிய கோரிக்கை!

பிரதமர் மஹிந்தவின் முக்கிய கோரிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் சரிவை சந்தித்தமைக்கான பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற த பினான்ஸ் கம்பெனி நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை எதிர்நோக்கி வருவது மற்றும் இது போன்ற நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகம் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.

இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதற்கு புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு இது போன்ற நிதி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ...

பிரதமரின் அறிவுறுத்தலின் படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைப்பாளர்களுக்கு அவர்களின் வைப்புத்தொகைகளில் நூற்றுக்கு 97 சதவீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி துணை ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments