28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News பெரும் சோகத்திலுள்ள கனடா பிரதமர்!

பெரும் சோகத்திலுள்ள கனடா பிரதமர்!

அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக,ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மூன்று முறை மன்னிப்பு கோரிய ஜஸ்டின் ...இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும்,இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களை கேட்பதற்கான நேரம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments