28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News சீனாவுக்கு தடை விதித்த அமெரிக்கா!

சீனாவுக்கு தடை விதித்த அமெரிக்கா!

சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் திகதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஜூன் 16-ம் திகதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல், இங்கிருந்து சீனா செல்வதற்கும் அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது.

Trump administration to ban Chinese airlines from flying to US ...தங்கள் நாட்டு விமான நிறுவனங்கள் மீதான தடையை நீக்காததால் அதிருப்தி அடைந்த அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments