28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் நெருக்கடி காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு போலியான செய்திகள் மற்றும் இணைய ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக பல நாடுகளில் தணிக்கைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மிச்செலே பச்செலெட் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கண்மூடித்தனமாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியை வெளியிட்டமைக்காக பத்திரிகை அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பிழையான தகவல்களை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை, பங்களாதேஸ் கம்போடியா சீனா இந்தியா உட்பட பல ஆசியநாடுகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதில் பொலிஸ்மா அதிபர் கொரோனா வைரஸ் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் அல்லது சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களை கைதுசெய்யப்போவதாக மிரட்டினார் என மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போலியான அல்லது தீங்குவிழைவிக்கும் செய்திகளை பரப்புபவர்களையும் கைதுசெய்யப்போவதாக அவர் எச்சரித்தார் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைமாறுகால நீதியை ...

அதிகாரிகளை அல்லது கொள்கைகளை விமர்சிப்பதற்காக கைதுசெய்வது என்பது அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை பொலிஸிற்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவுகளிற்காக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments