28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle மாதவிடாய் காலத்தில் இந்த 3 தப்பை மட்டும் செய்து விடாதீங்க!

மாதவிடாய் காலத்தில் இந்த 3 தப்பை மட்டும் செய்து விடாதீங்க!

பொதுவாக மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும்,மாற்றங்களை உணர்கிறார்கள்.

வயிறு உப்புவது,மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு,அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி,உடல் அசதி,தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

மேலும் வயிற்று வலி,இடுப்பு வலி,கை,கால் மற்றும் மார் வலிகளை இது தருவதால் அந்த 3 முதல் 6 நாட்கள் வரை பெண்களை பாடாய்ப்படுத்தி விடுகின்றது.

அதுமட்டுமின்றி மாதவிடாயின் போது நாம் செய்யும் செயல்கள் சில நேரங்களில் நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் செய்யவே கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

உடலை வருத்தி வேலை செய்யாதீர்கள்

உங்களது உடலை வருத்தி எந்தவொரு கடின வேலையைச் செய்தாலும் அது ரத்த போக்கை அதிகரித்து உங்களை மேலும் பலவீனமடைய செய்யும்.அதிக சிரமத்துடன் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது.

உணவை தவிர்க்கக் கூடாது

தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே ரத்த போக்கினால் உங்கள் உடல் இழக்கும் சத்தினை உங்களால் திரும்பப் பெற முடியும். அதனால் உணவைப் புறக்கணிக்காதீர்கள்.

நாப்கின்களை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் மாற்ற வேண்டும்

மாதவிடாய் காலத்தின் போது நாப்கீன்களை உபயோகிப்பவர்கள் என்றால் நிச்சயம் 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கீன்களை மாற்றிவிட வேண்டும்.

வெளியேறும் ரத்தம் கிருமிகளை உருவாக்கும் என்பதால் நீண்ட நேரம் ஒரே நாப்கீனை வைத்திருப்பது நோய் தொற்றுகளை உருவாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments