28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Food சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

சுவையான மாங்காய் தொக்கு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.எனவே இத்தகைய சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.

மாங்காய் தொக்கு செய்முறை தேவையான பொருட்கள்:

  • மிளகாய் தூள் – 1/2 கப்
  • உப்பு – மூன்று மேசைக்கரண்டி
  • மாங்காய் – இரண்டு

எண்ணெய் தாளிக்க:

  • எண்ணெய் – 1 கப்
  • கடுகு – 11/2 கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • பூண்டு – 10 பற்கள்
  • காய்ந்த மிளகாய் – 8

கடுகு வெந்தய தூள் தயார் செய்ய:

  • கடுகு – இரண்டு மேசைக்கரண்டி
  • வெந்தயம் – இரண்டு மேசைக்கரண்டி

 செய்முறை:

  • முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து,கடாய் நன்றாக சூடேறியதும் இரண்டு மேசைக்கரண்டி கடுகு,இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
  • கடுகு மற்றும் வெந்தயம் நன்றாக வறுத்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து பின்பு மிக்சியில் பொடிதாக அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது மாங்காய் தொக்குக்கு எண்ணெய் தாளிக்க வேண்டும்,இதற்கு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்,10 பூண்டு பற்கள்,காய்ந்த 8 சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள்,மஞ்சள் தூள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.
  • இப்பொழுது மாங்காய் தொக்கு செய்வதற்கு இரண்டு மாங்காயை எடுத்து கொள்ளவும், அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு நன்றாக துருவி கொள்ளவும்.
  • பின்பு ஒரு பவுல் ஒன்றை எடுத்து கொள்ளவும்,அவற்றில் துருகிய மாங்காயை சேர்க்கவும்,அதன் பிறகு அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,வறுத்து அரைத்து வைத்துள்ள கடுகு வெந்தய தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்,மூன்று மேசைக்கரண்டி உப்பு மற்றும் தாளித்து எடுத்து வைத்துள்ள எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான மாங்காய் தொக்கு தயார் இவற்றை ஒரு மணிநேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
  • இந்த மாங்காய் தொக்கினை அனைத்து உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம், அதேபோல் இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.இந்த மாங்காய் தொக்கு செய்முறையை செய்து சுவைத்திடுங்கள்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments