28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News இலங்கை ஜனாதிபதியினால் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

இலங்கை ஜனாதிபதியினால் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

வெளிநாடுகளிலிருந்து வருவோரை PCR பரிசோதனைக்குட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்தில் பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 ஒழிப்பு விசேட செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து நாட்டுக்கு வருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போதும் முகம்கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

PCR முடிவுகளை பெற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதற்கு விமான நிலைய வளாகத்திலேயே பரிசோதனைக் கூடமொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நோய்த்தொற்று நீண்ட காலம் இருக்க முடியும் என்பதாலும் அதனைத் தொடர்ந்தும் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனைக் கூடமொன்று இருப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து வருவோரை அந்த நாடுகளிலேயே பரிசோதனைக்குட்படுத்துதல், அதனை அரசாங்கத்தின் நேரடி தலையீட்டில் அல்லது அந்த நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது.

Polymerase chain reaction (PCR): Principle, procedure or steps ...

இவ்வாறு முன்கூட்டியே நோய்த் தொற்றுடையவர்களை கண்டறிவதன் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் போதும் தனிமைப்படுத்தலின் போதும் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாய்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments