29 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Cinema மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் இணையும் தனுஷ்!

மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் இணையும் தனுஷ்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வருகிறார் தனுஷ்.இவர் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் லாக்டவுனுக்கு பின் ரிலீசாக உள்ளது.இதனைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ்,இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பின்னர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து அத்ரங்கி ரே எனும் படத்தில் நடிக்கிறார்.இதுதவிர கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இது தனுஷ் நடிக்கும் 43-வது படமாகும்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மித்ரன் ஜவஹர்

இந்நிலையில்,தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி,குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments