28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் செய்த செயல்!

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் செய்த செயல்!

பிரித்தானியாவில் ஊரடங்கு பிறப்பிட்டிருந்த போது, மக்களுக்கு மனநல உதவி வழங்கும் சேவை மையத்தில் இளவரசர் வில்லியம் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ள விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை 284,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,40,465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டு மக்கள் கொரோனா பிடியில் இருந்து தப்பிப்பதற்காக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவர் மட்டுமின்றி நாட்டின் இளவரசரரான வில்லியம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது ரகசியம் ஒன்றை உடைத்துள்ளார்.அதில் நான் உங்களிடம் ஒரு ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியதால்,பொதுமக்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

அவர்களுக்கு குறுந்தகவல் வடிவில் மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை ராயல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சுமார் 2 ஆயிரம் தன்னார்வலர்கள் தாங்களாக இந்த உதவி மையத்தில் சேவையாற்றி வந்தனர்.நானும் இந்த மனநல உதவி மையத்தில் தன்னார்வலராக இணைந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும்,பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடையே சுமார் 3 லட்சம் குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும்,இதில் 65 சதவீத தகவல்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து வந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments