28.3 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

பிரான்சில் கொரோனா வைரசின் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் முற்றிலுமாக முடக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிந்து கொள்ளலாம்.

முக கவசம்- மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், பொது இடங்கள்,பொது போக்குவரத்து சேவைகள் என அனைத்திலும் முககவசம் அத்தியாவசியமான ஒன்று.

எனினும் தெருக்கள்,கடற்கரைகள்,பொதுபோக்கு பூங்காக்களில் கட்டாயம் இல்லை என்ற போதும்,அந்தந்த உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை- ஊரடங்கு உத்தரவால் தங்கள் உறவுகளை பிரிந்திருந்த போதும் சந்திப்பதற்காக தடை தொடர்கிறது.

பொது இடங்களில் சந்திப்பதாக இருந்தாலும் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடக்கூடாது, இது தனியார் குடியிருப்புகளுக்கும் பொருந்தும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முத்தமிட தடை- கிருமிகள் மிக எளிதாக பரவலாம் என்பதால் கைகுலுக்க தடைவிதிக்கப்பட்டது போன்று முத்தமிடவும் தடை விதிக்கப்படுகிறது.

1 மீட்டருக்கு நெருக்கமாக இருக்கக் கூடாது- சுகாதாரத்துறையின் அறிவுரையின் படி பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும்,அடிக்கடி கைகளை கழுவவும்,Hand Gelகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இருமும் போது முழங்கைகளை பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும்- பயணம் செய்வதற்கு தற்போது தடையில்லை என்ற போதும்,எல்லையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் யூன் 15ம் திகதி வரை தேவையான வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

வீட்டிலிருந்து வேலை- மே 11ம் திகதியே அலுவலகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும்,அதிகபட்சம் மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்,இது மக்கள் அலுவலகங்களில் கூடுவதையும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் தடுக்கும்.

பொழுதுபோக்கு – பிரான்ஸ் தற்போது ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில்.பச்சை மண்டலத்தில் மட்டும் சுற்றுலா தளங்கள்,நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்சு மண்டலங்களில் யூன் 22ம் திகதி வரை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரக்பி மற்றும் விளையாட்டு- 5000க்கும் மேற்பட்ட மக்கள் கூட தடையிருக்கும் நிலையில் ரக்பி,கால்பந்தாட்ட போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்.

மேலும் 2019/20 ம் ஆண்டுக்கான போட்டிகள் முடிவடைந்துவிட்டதாகவும்,வருகிற செப்டம்பர் மாதத்தில் புதிதாக தொடரை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி- பிரான்சில் ஆரஞ்சு மண்டலங்களை தவிர்த்து பெரும்பாலான நகரங்களில் பள்ளிகள்,கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வகுப்பறைக்கு 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.இதற்கேற்றவாறு வகுப்பறைகளின் நேர அட்டவணையை மாற்றியமைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மக்கள் பெரும்பாலும் கார்களை தவிர்க்குமாறும்,கஃபேக்கள். ரெஸ்டாரண்டுகளில் Outdoor Terrace யை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments