28.2 C
Jaffna
Friday, September 18, 2020
Home Spiritual Events உலக கடல் தினம் இன்று!

உலக கடல் தினம் இன்று!

ஆண்டு தோறும் ஜூன் 8ஆம் திகதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது.

மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும் பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு,  உயிர் வாயுவை உற்பத்தி செய்தும் முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது.

மேலும் காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள் சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் திகதியன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வை செய்வது குறித்து 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது.

அடுத்து இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments