28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home Sports Outdoor "Order of Australia” என்ற உயர் பட்டத்தால் மைக்கல் கிளாக் கௌரவிப்பு!

“Order of Australia” என்ற உயர் பட்டத்தால் மைக்கல் கிளாக் கௌரவிப்பு!

2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா உலக கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருந்த, அணியின் தலைவர் மைக்கல் கிளாக்கிற்கு “Order of Australia” என்ற உயர் பட்டம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு சாதனை அல்லது சிறப்பான சேவைகளை செய்தவர்களுக்கு மட்டுமே இந்த பட்டம் வழங்கப்படுகிறது.

இதற்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான அலன் போடர் (Allan Border) மற்றும் ஸ்ரீவ் வோ போன்றே மைக்கல் கிளாக்கும் தேசிய ரீதியாக பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது தவிர,கௌரவ பட்டத்தின் பொது பிரிவின் அதிகாரியாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்ற அதிகார பதவி அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங்,மாக் டெயிலர்,ஸ்டீவ் வோ,அலன் போடர் மற்றும் பொப் சிம்சன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டிருந்தன.

2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயல்பட்ட மைக்கல் கிளார்க் உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார்.

மைக்கல் கிளாக்கிற்கு 115 டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 643 ஓட்டங்களையும், 245 ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 7 ஆயிரத்து 981 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதுதவிர,34 இருபதற்கு இருபது போட்டிகளில் பங்கு கொண்டு 488 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

2015 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின்னர் தமது 39 வது வயதில் கிரிக்கட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments