28.4 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பொது போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில்,இன்று பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

இதனையடுத்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கொழும்புக்கு மக்கள் வந்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,“இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

எனினும்,பொது போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,மீண்டுமொரு முறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.

அதிக அச்சுறுத்தலான மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்படுமாயின்,அதற்கு பொது போக்குவரத்து சேவைகளே மிகவும் ஆபத்தான இடமாக காணப்படும்.

இந்நிலையில்,இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments