28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia பிரித்தானியா அரசின் கண்டிப்பான உத்தரவு!

பிரித்தானியா அரசின் கண்டிப்பான உத்தரவு!

பிரித்தானியாவிற்கு வருகைத்தருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அரசின் கண்டிப்பான உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கும் நீண்ட நாட்களாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது முடக்கநிலை தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் உள்நாட்டினர் நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரித்தானிய வருபவர்கள்,14 நாட்கள்,எங்கு தனிமையில் தங்குவர் என்பது உள்ளிட்ட விபரங்களை அவர்கள் வழங்க வேண்டும்.விதிமுறையை மீறுவோருக்கு,அபராதம் விதிக்கப்படும் என,அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு விமான நிறுவனங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

இது குறித்து Easyjet மற்றும் Ryanair ஆகிய இரு விமான நிறுவனங்கள்,பிரித்தானியா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதுடன்,வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளன.

அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இரு வாரங்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு நியாயமற்றது.இது,பிரித்தானிய குடிமக்களுக்கு மட்டுமின்றி,வெளிநாட்டினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே,கொரோனாவால் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டு,பலரும் வேலையிழந்துள்ளனர்.இதை மேலும் அதிகரிக்கவே,அரசின் உத்தரவு உதவும்.ஆகவே, அரசு இதை மீள பெற வேண்டும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments