28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Food சுவையான வாழைப்பழ கேக் செய்யும் எளிய முறை!

சுவையான வாழைப்பழ கேக் செய்யும் எளிய முறை!

குழந்தைகளுக்கு விடுமுறை வேற விட்டாச்சு,இந்த விடுமுறை நாட்களில் தான் குழந்தைகள் விதவிதமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய வாழைப்பழ கேக் எப்படி செய்வது என்று வாங்க பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழ எசன்ஸ் – 1 டீஸ்பூன்
  • வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
  • மைதா மாவு – 250 கிராம்
  • சர்க்கரை பவுடர் – 250 கிராம்
  • உலர்திராட்சை – 125 கிராம்
  • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
  • ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன்
  • கோழி முட்டை – 4
  • வெண்ணெய் – 200 கிராம்
  • வாழைப்பழம் – 250 கிராம்
  • சோடியம் பை கார்பனேட் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • வாழைப்பழ கேக் செய்முறை முதலில் மைதா மாவை சல்லடையில் சலிக்கும்போது,ஆப்ப சோடா,பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலிக்க வேண்டும்.
  • வாழைப்பழத்தையும்,சோடியம் பை கார்பனேட் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்பு வெண்ணெய் மற்றும் சர்க்கரை பவுடர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை வரும் அளவிற்கு நன்கு அடித்து கொள்ளவும்.
  • பின்பு அடித்த முட்டையுடன் வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.
  • முட்டை கலவை,வெண்ணெய் கலவை,மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம்,திராட்சை,முந்திரி மற்றும் எசன்ஸ் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • மூன்று ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பரை போட்டு வெண்ணெய் தடவி,அவற்றில் அந்த கலவையை ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் சுமார் 1 மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் கேக் தயார்.இந்த கேக்கை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments