27.7 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Education சற்றுமுன்னர் வெளியான தகவல்!பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன!

சற்றுமுன்னர் வெளியான தகவல்!பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன!

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.

இதன்படி ஜூலை 29ஆம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.

ஜீன் 20ஆம் திகதி 12 மற்றும் 10ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஜூலை 26ஆம் திகதி தரம் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறும்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் கல்வியமைச்சு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 10,11,12,13 ஆகிய தரங்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகள் இடம்பெறும் என்பதோடு  3 ஆம் மற்றும் 4 ஆம் தரங்களுக்கு மு.ப 11.30 வரையும் 5 ஆம் தரத்திற்கு நண்பகல் 12 மணிவரையிலும் வகுப்புக்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments