27.8 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Cinema மாணவர்களின் கல்விக்கு எதிர்ப்பு கூறும் R.J.பாலாஜி!

மாணவர்களின் கல்விக்கு எதிர்ப்பு கூறும் R.J.பாலாஜி!

தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ஆர்.ஜே.பாலாஜி,ஆன்லைன் வகுப்புகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்,“கடந்த சில மாதங்களா நம்ம சுத்தி நடக்குற விஷயங்கள் எல்லாம் நமக்கு மன அழுத்தத்தை கொடுக்குது.அதில கடந்த சில வாரமா சின்ன குழந்தைங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் 8 மணி நேரம்,9 மணி நேரம் குழந்தைங்களுக்கு கிளாஸ் வைக்கும் போது உடல்அளவிலும்,மனதளவிலும் ஏற்படுகிற அழுத்தத்தை அவங்களால எப்படி சமாளிக்க முடியும்?

இத்தனை நாளா அம்மா அப்பா,‘போன் பாக்காத,டிவி பாக்காத’ன்னு சொல்லி வளர்த்த நிலையில இப்போ ‘போன பாரு,டிவிய பாரு’ன்னு அவங்க சொல்லும்போது மாணவர்களுக்கும் கஷ்டமா இருக்கும்.பெரியவங்களுக்கே ரொம்ப நேரம் போனும், கம்ப்யூட்டரும் பார்த்து வேலை செய்தா பிரச்சினைகள் ஏற்படும்னு மனநல மருத்துவர்கள் சொல்லும்போது சின்ன குழந்தைங்க எப்படி இதை சமாளிப்பாங்க.

ஆர்.ஜே.பாலாஜி

நாம இப்போ கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும்,வருஷம் போகுதே, பாடங்களை முடிக்கணுமேன்னு பள்ளி,கல்லூரிகள் யோசிக்கிறது நியாயமா இருந்தாலும்,அதுக்கு தீர்வு இதுவா? காலங்காலமா 8 மணி நேர வகுப்புன்னு ஸ்கூல்ல இருந்தத ஆன்லைன் கிளாசுக்கு நடைமுறை படுத்துறது சரியான்னு பாத்துக்கோங்க.

ஆசிரியர்களுக்குமே இது பெரிய அழுத்தம் தான்.பிற மாநிலங்களில் கிளாஸ் எடுப்பதை வீடியோ ரெக்கார்ட் செய்து குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க.மாணவர்களும் விரும்பும் நேரத்தில் அதைப் பார்க்கின்றனர்.மீண்டும் இது குறித்து யோசித்துப் பாருங்க”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments