28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home Lifestyle Food உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால் செய்வது எப்படி?

உடலுக்கு வலிமை தரும் பருத்தி பால் செய்வது எப்படி?

பருத்தி விதைகளில் கோலின்,விட்டமின்கள்,புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது.

பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.

அதுமட்டுமின்றி டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாக கருதப்படுகின்றது.

தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • சுக்கு – சிறிதளவு
  • கருப்பட்டி – 1 வட்டு (பெரியது)
  • தேங்காய் மூடி – 1
  • பச்சரிசி – 100 கிராம்
  • கருப்பு பருத்தி விதை – 50 கிராம்
  • ஏலக்காய் – 3
  • முந்திரி – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை:

  • 6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.
  • பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.
  • கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.
  • பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும்.அரிசி வெந்தவுடன்,குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து,பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
  • பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.
  • தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.
  • அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments