28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News அமெரிக்காவில் காந்தியை சேதப்படுத்திய டிரம்ப்!

அமெரிக்காவில் காந்தியை சேதப்படுத்திய டிரம்ப்!

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி  சிலையை கடந்த 2ம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்தனர்.இந்த செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனமும்,வருத்தமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது,காந்தி சிலை சேதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு சுருக்கமாக பதிலளித்த ட்ரம்ப்,சிலையை சேதப்படுத்தியது ‘அவமானம்’ என்றார்.
சேதப்படுத்தப்பட்டதால் மூடி வைக்கப்பட்டுள்ள காந்தி சிலை

இதுதொடர்பாக விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை,பெருநகர காவல்துறை மற்றும் தேசிய பூங்கா சேவையிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை சரி செய்து விரைவில் திறக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

அதிபர் டிரம்ப்பும்,மெலனியா டிரம்பும் இந்தியா வந்திருந்த போது,அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரம் செலவிட்டனர்.

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,‘காந்தியின் ஆஸ்ரமத்தை நானும் மெலானியாவும் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்.இங்குதான் புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை அவர் தொடங்கினார்.’என்றார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments