27.7 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News Asia புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க நடவடிக்கை

புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க நடவடிக்கை

கொவிட் 19 நிலைமையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டின் ஊடாக நூற்றுக்கணக்கான புதிய படைப்புகளின் உருவாக்கத்தை காண முடிந்தாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டாரா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் சுகாதார சேவைக்கு அதிகமான உள்ளூர் தயாரிப்புகளை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் அவற்றுக்கு தொழில்நுட்ப வசதிகளையும் மற்றும் நிதியுதவியையும் வழங்க உள்ளதாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உபகரண வசதி,தொழில்நுட்ப வசதி மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளையும் இங்கு குறிப்பிடப்படாத வேறு எந்த யோசனைகளையும் இதற்காக முன்வைக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதுபோன்ற யோசனைகள் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்திற்கு முன்வைக்கப்பட்டால்,அதனை நடைமுறைப்படுத்த தேவையான நிதியை வழங்கவும் தயாராக இருப்பதாக டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

மேலும் சுகாதாரத் துறையில் புதுமையான படைப்புகளை உருவாக்க விரும்புவோர் சுகாதார அமைச்சின் இணையத்தளமான w.health.gov.lk என்பதை பார்வையிடலாம் அல்லது அந்த செயற்றிட்டத்தின் இணைய முகவரியான www.pssp.health.gov.lk ஐயும் பார்வையிடலாம்.

அல்லது விபரங்கள் மற்றும் பயன்பாடுகளுக்குக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பவும்.

புதிய படைப்பாளிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என டொக்டர் ஜயசுந்தர பண்டாரா சுட்டிக்காட்டினார்.

மேலதிக விபரங்களுக்கு 0112680549,0718123858 என்ற இலக்கத்தின் ஊடாக இமேசா அபேசேகர என்ற சுகாதார பிரிவின் அதிகாரமளித்தல் திட்ட உத்தியோகத்தரை தொடர்புக்கொள்ள முடியும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments