28.2 C
Jaffna
Monday, July 13, 2020
Home News Asia நாட்டு மக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டு மக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை!

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல்,மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும்.அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“பொதுத்தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க எதிரணியினர் முயற்சித்தனர்.ஆனால்,அந்த முயற்சிக்கு உயர்நீதிமன்றம் பதிலடி கொடுத்தது.

அதேவேளை,வேட்புமனுக்களையும் மீளத் தாக்கல் செய்ய எதிரணியினர் முயற்சித்தனர்.

அதுவும் தோல்வியில் முடிந்தது.ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை எதிரணிக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமையை சவாலுக்குட்படுத்திய எதிரணியினருக்குத் தேர்தலில் மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள்.

கடந்த ஆட்சியில் ஊழல்,மோசடிகளால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரையும்,ஐக்கிய மக்கள் சக்தியினரையும் மக்கள் வீட்டுக்கு அனுப்பியே தீருவார்கள்” – என்றார்.

0 Reviews

Most Popular

800 படத்துக்கான விளக்கமளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி,கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்...

திருமண அறிவிப்பை வெளியிட்ட ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான்...

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்...

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக...

Recent Comments