28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சிக்கல்!

டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சிக்கல்!

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா அமைப்பினர் முயற்சித்து வருவதாக சர்வதேசத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ‘ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக இருப்போம்’ என அமெரிக்காவை அல்கொய்தா மறைமுகமாக மிரட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்க வீதிகளில் போராடி கொண்டிருப்பவர்களுக்கு தானாக முன்வந்து ஆதரவளிக்குமாறு கோரும் விதத்தில், உயிரிழந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் கடைசி நிமிடங்களை சுட்டிக்காட்டும் படமும், பிரபல சுவர் ஓவியரான பேங்க்சியின் ஓவியமும் ஜிஹாதி குழுவினரான அல்கொய்தா அமைப்பினரின் இணைய பத்திரிகையான ஒன் உம்மாவின் ஆங்கில பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அரசு இனவெறிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. இதனால் விரைவில், அமெரிக்காவும் அதன் அரசியல் தலைமைகளும் பொருளாதார அமைப்புகளும் அழிந்துவிடும் எனவும் அந்த இணையப் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்காமுழுவதும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவை நடக்க வாய்ப்பு உள்ளது. ஜனநாயக கட்சியினர் கூட அமெரிக்கர்களுக்கு உதவ முடியாது. ஆனால், நாங்கள் உதவுவோம். நாங்கள் எப்போதும் ‘ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக இருப்போம்’ எனவும் கூறப்பட்டுள்ளது.டொனால்ட் ட்ரம்பிற்கு நடந்தது என்ன ...

 

அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களை முதலாக கொண்டு, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்களை அல்கொய்தா அமைப்பினர் அணுகி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments