27.9 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News மீண்டும் களத்தில் இறங்கும் ட்ரம்ப்!!

மீண்டும் களத்தில் இறங்கும் ட்ரம்ப்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த தன் தேர்தல் பிரசாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,ஓக்லஹாமா மாகாணத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்.

நவம்பர்,3ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார்.ஜனநாயக கட்சி சார்பில்,ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“தேர்தல் பிரசாரத்தை,ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரில் இருந்து,மீண்டும் துவங்குவோம்.அடுத்து,புளோரிடாவில் பிரமாண்ட பேரணியை நடத்துவோம்.அதைத் தொடர்ந்து,டெக்சாஸ்,அரிசோனா,வட கரோலினா மாகாணங்களிலும்,பெரிய அளவில் பேரணி நடத்துவோம்.”இவ்வாறு,அவர் கூறினார்.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பேரணிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை விட,ட்ரம்பின் பேரணிகளில் அதிகமாகவே கூட்டம் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும்,செய்தி நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில்,ஜோ பிடன் முன்னிலை வகித்து வருவதாகவும்,இதனால் ட்ரம்பிற்கு ஆதரவு குறைவு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.தற்போது குறித்த கருத்து கணிப்புகள் பொய்யாகி விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments