28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home Lifestyle Food சுவையான மினி பிட்சா செய்வது எப்படி!

சுவையான மினி பிட்சா செய்வது எப்படி!

தேவையான பொருட்கள்:

  • பிட்சா சாஸ் – 1/4 கப்
  • காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன்,வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
  • மைதா – 1/2 கப்
  • கோதுமை மாவு – 1/4 கப்
  • ஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1 டீஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர் – 1/4 கப்
  • சீஸ் – 1/2 கப் (துருவியது)
  • சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு
  • ஓரிகானோ – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர்,எண்ணெய்,உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து,எண்ணெயுடன் சேர்த்து பிசைந்து,1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி,1/4 இன்ச் மொத்தமான சப்பாத்தி போன்று தேய்த்து,ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி,ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • பின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து,அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து,முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி,பின் சிறிது சீஸ் பரப்பி,காய்கறிகளை வைத்து,இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி,மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சுவையான மினி பிட்சா ரெடி!இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments