28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Asia பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆவேசம்!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆவேசம்!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம்,மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது,டெர்ரக் சவுவின் (44) என்ற பொலிஸ் அதிகாரி,பிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார்.இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது.அமெரிக்கா மட்டுமல்லாது பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் படி பிரித்தானியாவில் நடந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது.

இந்த நிலையில்,வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து போரிஸ் ஜோன்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,தேசிய நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உண்டானது அபத்தமானது, வெட்கக்கேடானது.ஆம் சில நேரம் வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய கருத்துகள் இன்றைய நாளில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம்.

ஆனால் அவர் ஒரு ஹீரோ.அவர் இந்த நினைவுச் சின்னத்துக்குத் தகுதி ஆனவர்.நாம் நமது கடந்த காலங்களில் திருத்தம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments