28.7 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News Asia பெருந்தொற்றின் பிடியில் இருந்து மீண்ட நாடுகள்!

பெருந்தொற்றின் பிடியில் இருந்து மீண்ட நாடுகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தாலும் சில சிறிய நாடுகள் அதை முற்றாக ஒழித்துக் கட்டி மீண்டு வந்திருக்கின்றன.

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியுள்ள நிலையில் பெரும்பாலான நாடுகளால் அதை கட்டுப்படுத்தத்தான் முடிந்திருக்கிறது.

கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை. அப்படிப்பட்ட நாடுகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் கொரோனாவை ஒழித்த 9 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து:

வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்து கொரோனா பரவிய உடன் ஊரடங்கை அமல்படுத்தியது.

சுமார் 75 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அதற்குள் தொடர் பரிசோதனைகள் மூலம் கொரோனாவை வென்றது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி கண்டறியப்பட்ட கடைசி கொரோனா தொற்றாளரும் ஜூன் 8-இல் குணமடைந்தார்.

1,500 பேர் பாதிக்கப்பட்டு 22 மரணங்களுடன் நியூசிலாந்தில் கொரோனா ஒழிந்தது.

தான்சானியா:

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடவுளின் அருளால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ஜான் மகுஃபுலி.

புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிடுவதை ஆறு வாரங்களுக்கு முன் தான்சானியா நிறுத்திக்கொண்ட சூழலில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

509 பேருக்கு மேல் பாதிக்கப்படவவில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறினாலும் உண்மையில் கொரோனா ஒழிந்துவிட்டதா அல்லது ஒளித்து வைத்திருக்கிறார்களா என சந்தேகமாகவே இருக்கிறது.

வாடிகன்:

இத்தாலிக்குள் இருக்கும் குட்டி நாடான வாடிகன் கடந்த 4ஆம் திகதி கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டதில் கடைசி தொற்றாளரும் குணமடைந்துவட்டதாக அதன் செய்தி தொடர்பாளர் மாட்டோ ப்ருனி அறிவித்தார்.

அதற்கு பின்னரே செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.

ஃபிஜி தீவு:

9 லட்சம் பேர் வாழும் தென் பசிபிக் தீவான ஃபிஜியில் வெறும் 18 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 45 நாட்களாக புதிய தொற்று உறுதியாகாத நிலையில், 100 விழுக்காடு குணமடைந்துவிட்டதாக பிரதமர் பிராங் பைனிமாரமா அறிவித்தார்.

சில பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தி, எல்லையில் கட்டுப்பாடுகளை விதித்து இதனை சாத்தியப்படுத்தியது ஃபிஜி தீவு.

மான்டிநெக்ரோ:

ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோ, முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69-வது நாளில் கொரோனாவை ஒழித்திருக்கிறது.

அந்த நாட்டில் மொத்தம் 324 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடு மான்டிநெக்ரோ என்பது கூடுதல் தகவல்.

சீசெல்ஸ்:

இந்தியப் பெருங்கடலில் 115 குட்டி தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் கடந்த மாதம் 18ஆம் திகதியே கொரோனா இல்லாத தேசமாகிவிட்டது. வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

St Kitts and Nevis

நாட்டில் பாதிக்கப்பட்ட 15 தொற்றாளர்களும் கடந்த மாதம் 19-ஆம் திகதி குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். 15 பேருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள்.

கிழக்கு திமோர்:

கிழக்கு திமோரில் மொத்தமே 24 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அவர்களும் குணமடைந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை.

பபுவா நியூகீனி:

பசிபிக் தேசமான பபுவா நியூகீனியிலும் 24 தொற்றோடு கொரோனா முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments