28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia முதன்முறையாக பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் சகோதரி!

முதன்முறையாக பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் சகோதரி!

இருதரப்பு உறவுகள் குறைந்து வரும் நிலையில் வடகொரிய தலைவரின் சக்திவாய்ந்த சகோதரி கிம் யோ முதன்முறையாக தென் கொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வடகொரியாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை எல்லையில் வீசிச் செல்வதாகவும்,

இது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் நிலை ஏற்படும் என கிம் யோ எச்சரித்துள்ளார்.

தென் கொரியாவை எதிரி நாடு என வடகொரியா அறிவித்துள்ள நிலையில், எல்லை நகரமான கேசோங்கில் செயல்பட்டு வரும் கொரிய நாடுகள் இடையேயான பயனற்ற தொடர்பு அலுவலகம் நிர்மூலமாவதை சியோல் விரைவில் காண நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய ஆர்வலர்களின் இந்த அத்துமீறலை தாம் ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகவும்,அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் எனவும் கிம் யோ தெரிவித்துள்ளார்.

மேலும்,உன்னதமான தலைவர் கிம் ஜோங், நமது கட்சி மற்றும் தேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட எனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம்,

எதிரி நாட்டுக்கு பொறுப்பான தக்க பதிலடி அளிக்க வேண்டு என்ற ஒரு அறிவுறுத்தலை நாட்டின் ராணுவ தலைமைக்கு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் ராணுவமும் எங்கள் மக்களின் மனக்கசப்பைக் குறைக்க உரிய முடிவை எடுக்கும், நிச்சயமாக அதை நிறைவேற்றும் என நான் நம்புகிறேன் என்றார்.

கிம் யோ குறிப்பிடும் கேசோங்கில் செயல்பட்டு வரும் கொரிய நாடுகள் இடையேயான தொடர்பு அலுவலகமானது கொரோனா பரவல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே மூடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி இதே அலுவலகம் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜாங் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே ஆகிய இருவருக்கும் இடையே மூன்று உச்சி மாநாடுகளை ஏற்பாடு செய்து அதில் வெற்றியும் கண்டது.

கிம் ஜோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே அணுசக்தி உச்சிமாநாட்டை அமைக்க மூனின் தென் கொரிய அரசாங்கம் கடுமையாக முயன்றது.

அதே நேரத்தில்,மூன் கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும் பணியாற்றினார்.

இந்த நிலையில், சமீபத்திய மாதங்களில் வட கொரியா தெற்குடனான அனைத்து ஒத்துழைப்பையும் நிறுத்தி வைத்துள்ளது.

அதே நேரத்தில் டிரம்ப் நிர்வாகத்துடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments