27.8 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Lifestyle Health தினமும் இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். இதனை பூலோகக் கற்பக விருட்சம் என்று இளநீரை பலரும் கூறுவதுண்டு.

ஏனெனில் இதில் பல்வேறு சத்துக்களும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளும் இதில் பலவுள்ளதால் தான் இளநீரை இப்படி கூறுகின்றனர்.

இளநீரை பலரும் கோடைக்காலங்களிலே பலரும் அருந்துவதுண்டு.இது ஏராளமான மருத்துப்பயன்களை உள்ளடக்கியுள்ளது.அதுமட்டுமின்றி உடலில் உள்ள பாதி நோய்களை போக்க வல்லது.

தற்போது இளநீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் ஆரம்பத்திலேயே தடுக்க இளநீரை அடிக்கடி பருகுவது அவசியமாகும்.
  • இளநீர் தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் குறிப்பாக சோரியாசிஸ் வியாதி ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது.
  • சீதபேதி போன்ற கடுமையான வயிற்றுப் போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் உப்புகளை இழந்தவர்கள் இளநீரை பருகி வர வயிற்றுப் போக்கு நிற்பதோடு,ரத்தத்தில் இருந்து வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறிய உப்புக்கள், தாதுக்கள் அனைத்தும் மீண்டும் உடலுக்கு கிடைக்கப்பெற உதவுகிறது.
  • இளநீரை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு ஹைபர்டென்சன் எனப்படும் அதீத மன அழுத்தம் போன்றவற்றைக் குறைத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
  • அதீத மது போதைக்குள்ளானவர்களின் போதைதெளிய இளநீரை சிறிது,சிறிதாக குடித்து வந்தால் உடல் இழந்த பொட்டசியம் சத்துக்களை மீண்டும் பெறுவதோடு அதிக போதையால் ஏற்படும் தலைவலி,கிறுகிறுப்பு தன்மை போன்றவை நீங்கி போதை தெளியும்.
  • இளநீரில் சைட்டோகைனின்கள் அதிகமுள்ளதால் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தோற்றத்தை மேலோங்கச் செய்கிறது.
  • தினமும் இளநீர் குடிப்பவர்களுக்கு உடலில் இந்த எலக்ட்ரோலைட் உப்புச்சத்துக்கள் கிடைக்கப் பெற்று,உடலுக்கு புத்துணர்ச்சியையும்,சுறுசுறுப்பையும் தந்து சிறப்பான உடல் இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது உடல் களைப்பையும் சீக்கிரத்தில் போக்குகிறது.
  • இளநீரில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிக அளவு நார்ச் சத்துக்களும் நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த இயற்கை பானமாக இளநீரை இருக்கிறது.
  • அடிக்கடி இளநீர் அருந்துவதால் வியர்வை வழியாக அத்தியாவசிய பொருட்கள் இழப்பை ஈடு செய்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.
  • இளநீரில் லாரிக் அமிலம் அதிகளவில் இருப்பதால் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments