28.7 C
Jaffna
Thursday, September 24, 2020
Home Sports Outdoor பல ஆண்டு ரகசியத்தை உடைத்த முத்தையா முரளிதரன்!

பல ஆண்டு ரகசியத்தை உடைத்த முத்தையா முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடர் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இலங்கை அணியின் ஜாம்பவானும், சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடி பின்னர் ஓய்வு பெற்றார்.

2008 ஆம் ஆண்டு முதல் முறை அவர் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட போது அவருக்கு ஏல தொகையாக 4.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று சீசன்கள் சென்னை அணிக்காக விளையாடிய முரளிதரன் 2011-ஆம் ஆண்டு கேரளா கொச்சி டஸ்ர்கஸ் அணிக்காக விளையாடினார்.

பின்பு அடுத்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடி அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் உடன் தொடர்பில் இருக்கும் முரளிதரன் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும்,ஆலோசகராகவும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் குறித்து முரளிதரன் கூறுகையில்,சென்னை அணிக்கு 3 ஆண்டுகள் விளையாடினேன். மேலும் சென்னை அணியில் நான் தெரிவாக வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் வேண்டிக்கொண்டேன்.

ஏனெனில் சென்னையில் நிறைய வீரர்கள் தமிழ் பேசும் வீரர்கள் இருப்பதால் அவர்களுடன் நன்கு பேசி பழக முடியும்.

மேலும் சென்னை எனக்கு பிடித்த ஊர் என்பதன் காரணமாகவே சென்னை அணியில் நான் தெரிவாக நினைத்தேன்.அதற்கேற்றார்போல் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் நான் விளையாடி விட்டேன்.

நான் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்கு பயிற்சி கொடுத்தாலும்,சென்னை அணியை நான் மிகச் சிறந்த அணியாக பார்க்கிறேன்.

எனக்கு தனிப்பட்ட முறையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் பிடித்த அணி என்று கூறியுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments