28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home News Europe கொரோனா மரணங்களை தடுக்கும் அபூர்வ மருந்து!

கொரோனா மரணங்களை தடுக்கும் அபூர்வ மருந்து!

பிரித்தானியாவில் கொரோனா மரணங்களை 5 பவுண்ட் செலவில் தடுக்கும் அபூர்வ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்தால் பிரித்தானியாவில் 4,000 முதல் 5,000 உயிரிழப்புகளை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பல நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துவிட்டனர்.

பெரும்பாலான நாடுகளில் உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

பல மருந்துகள் சோதனை முயற்சியாகத் தான் இன்றளவும் உள்ளது.இந்நிலையில் பிரித்தானியாவில் 6 பவுண்ட் செலவில் கொரோனாவுக்கான மருந்தினை அந்நாட்டு தேசிய சுகாதார சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

சாதாரண ஸ்டிராய்டு வகை மருந்தாகிய ‘டெக்சாமிதாசோன்’ கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது.இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது.

‘டெக்ஸசமிதாசோன்’ எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், ஒவ்வாமைக்கும் பயன்படக் கூடியது.அதுவும் 6 பவுண்ட் செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் இம்மருந்தினை சோதித்து பார்த்துள்ளனர். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களில் 8 ல் 3 பேர் உயிரிழந்த நிலையில் இம்மருந்தின் பயன்பாட்டிற்கு பிறகு 2 பேர் மட்டுமே உயிரிழந்ததை கண்டுபிடித்தனர்.

இம்மருந்து ஊசியாக செலுத்தப்படும் போதும் இறப்பு விகிதம் 5ல் ஒரு பங்காக குறைந்தது. அரசு அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில்,

இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம்,நமது விஞ்ஞானிகள் நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.

இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தேசிய சுகாதார சேவையின் Stephen Powis கூறுகையில் இது நல்ல மாற்றம்,கொரோனா நோயாளிகளை பிரித்தானியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும்.

வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது.பல ஆண்டுகளாகும் என்றும் இருந்த நிலையில் மிக விரைவாக நல்ல தீர்வு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments