28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home Education பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 6 ஆம் திகதி 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.

விசேடமாக சமூக தூரத்தை பராமரித்தல், குழந்தைகளை மட்டுமே ஆசனங்களில் அமரவைத்து கொண்டு செல்லல்,குழந்தைகளுக்கு தொற்றுநீக்கி பயன்படுத்தல், முகக்கவசங்கள் அணிவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இருப்பினும்,அனைத்து பாடசாலைகளும் ஜூலை 20 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளதால்,போக்குவரத்து சேவையின் போது பாரிய சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டார்.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments