28.6 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home News Asia சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை!

சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை!

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வீழ்த்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் வரை அந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் 154 பிரச்சார கூட்டங்களை நடத்தியதாகவும்,இந்த முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 1000 கூட்டங்களை நடத்த எதிர்பார்பதாகவும் அவர் கூறினார்.

அதற்கும் அதிகமாக பிரச்சார கூட்டங்களை நடத்தி காட்டுமாறு தான் ஏனைய போட்டியாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிப்பெறுவதோடு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வது போல் சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments