28.7 C
Jaffna
Thursday, July 2, 2020
Home Lifestyle Food செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை!

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை!

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை விளக்கம் மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை படித்து வீட்டில் செய்து அசத்துங்கள்.சரி வாங்க செட்டி நாடு மீன் வறுவல் செய்முறை பற்றி இந்த பகுதி பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

  • மீன் – 1/2 கிலோ
  • சிவப்பு மிளகாய் – 12
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • சிறிய வெங்காயம் – 10
  • பூண்டு – 4 பற்கள்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கிராம்பு – 10

செய்முறை:

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் சீரகம்,ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை,மிளகு ஒரு ஸ்பூன்,கிராம்பு 10,சிவப்பு மிளகாய் 12 ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் இருந்து இறக்கி,1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 பெருங்காயம் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் பொடிதாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.செட்டிநாடு மீன் வறுவல் மசாலா தயார்.
  • பின்பு அதே மிக்சியில் 10 வெங்காயம் மற்றும் 4 பூண்டு பற்களை சேர்த்து பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.இந்த போஸ்ட்டுடன் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மீன் மசாலாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இப்பொழுது மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.அவற்றில் கலந்து வைத்துள்ள மசாலாவை மீனுடன் சேர்த்து பிசைந்து மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
  • ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
  • இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவலை,சாம்பார் சாதம்,குருமா,தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

0 Reviews

Most Popular

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை வெளியிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்!

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக,ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச்...

30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு!

ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில்,சீனா...

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் விதிக்கப்பட்ட தடை!

பிரான்ஸ் தலைநகரில் இம்மாதத்தில் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் பாரிசில்,இம்மாதத்தின் சில நாட்களுக்கு பட்டாசுகள் விற்பனைக்கு...

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...

Recent Comments