28.1 C
Jaffna
Friday, July 3, 2020
Home Sports Outdoor அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்!

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விளையாட்டு மைதான நிர்வாகங்கள் பயிற்சி மையங்கள் அனைத்தும் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

அதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியால் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது.

அந்தவரிசையில் 2016-ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரேமி ஹிக்கை (54) நீக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆள்குறைக்குப்பு குறித்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ஏர்ல் எட்டிங்ஸ்,கொரோனா பாதிப்பால் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் 40 நல்ல பணியாளர்களை இழப்பது வேதனை அளிக்கின்றது.

இதில் அவர்களுடைய தவறு ஒன்றும் இல்லை ஆனால் இதன்மூலம் கிரிக்கெட் பணிகளில் தொடர்ந்து ஈடுபட இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பதிவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க...

பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக,பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை...

Realme நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Helio G35 mobile processor,பிரதான நினைவகமாக 2GB...

காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில்...

Recent Comments