28 C
Jaffna
Friday, September 25, 2020
Home News பிரான்சில் அடுத்த முதல் இவை எல்லாம் திறக்கப்படும்!

பிரான்சில் அடுத்த முதல் இவை எல்லாம் திறக்கப்படும்!

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்கம் மற்றும் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்ட நிலையில்,தற்போது அது எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் 160,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,633 பேர் உயிரிழந்துள்ளனர்.இருப்பினும் ஆரம்பத்தில் இருந்ததை விட,நாட்டில் இப்போது கொரோனாவின் இறப்பு வீதம் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக நாட்டில் பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தலைநகர் பரிஸ் உட்பட நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கம் மற்றும் கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகள் மட்டுமிலாமல்,கேளிக்கை விடுதிகள்,விளையாட்டு அரங்குகள் மற்றும் கேசினோ சூதாட்ட விடுதிகளும் வரும் ஜூலை 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில்,வெள்ளிக்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு,தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுக்கு மத்தியில் இவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு,விளையாட்டு அரங்கம் மற்றும் பந்தைய அரங்குகளுக்கு அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments