28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News தொடங்கும் முன்னரே கடும் பின்னடைவை சந்திந்த டொனால்டு டிரம்பின் தேர்தல் பேரணி

தொடங்கும் முன்னரே கடும் பின்னடைவை சந்திந்த டொனால்டு டிரம்பின் தேர்தல் பேரணி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தேர்தல் பரப்புரை குழுவின் 6 உறுப்பினர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்கான சம்பவம் கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

துல்சா,ஓக்லஹோமா பகுதியில் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

இந்த நிலையிலேயே பரப்புரை குழுவில் செயல்பட்டுவரும் உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,அணியின் தகவல் தொடர்பு இயக்குனர் டிம் முர்டாக், தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டதாகவும்,

கொரோனா சோதனை செய்த எந்த ஊழியரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

மட்டுமின்றி,அந்த ஊழியர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்ட எவரும் இந்த நிகழ்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் முதல் தேர்தல் பரப்புரை பேரணி என்பதால் பல்வேறு மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வர வாய்ப்பிருப்பதால்,கொரோனா பரவல் தொடர்பில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர் சுகாதார நிபுணர்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள அரங்கமானது சுமார் 19,000 இருக்கைகள் கொண்டது என்பதால்,அரங்கம் கண்டிப்பாக நிரம்பும் என்கின்றனர்.

இதனிடையே,பேரணியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உரிய அடிப்படை சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என டிம் முர்டாக் தெரிவித்துள்ளார்.

விரும்பியவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் எனவும்,கிருமி நாசினி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாரம் துல்சா நகரமானது கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 100% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது,இது மாநிலத்தின் மிகப்பெரிய பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு அமுலுக்கு வந்த பின்னர் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய நிகழ்வு இதுவென கூறப்படுகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments