28.4 C
Jaffna
Monday, July 13, 2020
Home News Europe சுவிஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்த வாழைப்பழ பெட்டிகள்!

சுவிஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்த வாழைப்பழ பெட்டிகள்!

சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளைகளில் இருந்து சுமார் 140 கிலோ அளவுக்கு கோகோயின் மீட்கப்பட்ட நிலையில்,அதன் முழு பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் பல கூட்டுறவு கிளைகளில் இருந்து வாழைப்பழ பெட்டிகளில் மறைத்து கடத்தப்பட்ட 140 கிலோ கோகோயின் போதை மருந்து அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த நிலையில் அதன் பின்னணி தொடர்பில் முக்கிய நிபுணர் ஒருவர் முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோகோயின் போதை மருந்தானது பெருமளவில் கொலம்பியா,பொலிவியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

பிரேசில் மற்றும் வெனிசுலாவில் உள்ள பெரிய துறைமுகங்களில்,கப்பல் துறைமுகத் தொழிலாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு,அங்கிருந்து ரகசியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய துறைமுக ஊழியர்களுக்கு மீண்டும் லஞ்சம் தரப்பாட்டு, அந்த போதை மருந்தானது உரியவர்களால் கைப்பற்றப்படுகிறது.

பின்னர் இந்த கோகோயின் மறுவிற்பனை செய்யப்பட்டு துறைமுக நகரங்களிலிருந்து ஐரோப்பா முழுவதையும் சென்றடைகிறது.

தற்போது சுவிட்சர்லாந்தில் வாழைப்பழ பெட்டிகளில் கோகோயின் சிக்கியுள்ளது. இது பெரும்பாலும் வாழைப்பழ வியாபாரிக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

ஆனால் தற்போது உரியவர்கள் துறைமுகத்தில் இருந்து தங்களது போதை மருந்து பெட்டியை கைப்பற்றுவதில் தாமதம்,அல்லது அதிக கட்டுக்காடுகள் காரணமாக கைவிட்டுள்ளனர். அதனாலையே கூட்டுறவு கிளைகளில் அந்த போதை மருந்து சிக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் மட்டும் ஆண்டுக்கு 3.5 முதல் 4 டன்கள் அளவுக்கு கோகோயின் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Reviews

Most Popular

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங்...

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பிரித்தானியா வெளியிட்டுள்ள பட்டியல் ஒன்றில்,70க்கும் மேற்பட்ட நாடுகள்,இனி பிரித்தானியாவுக்கு வந்தால் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,ஆஸ்திரியா,இத்தாலி...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில்,அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரள...

திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு!

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Recent Comments