28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News Asia தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள ஆரம்பம்!

இன்று முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம்,மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த செயற்பாட்டுக்கு இணங்க,பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன் காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள்,கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை,பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 10 அலுவலக நாட்களுக்குள் வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து குறித்த தினத்தில்,தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments