27.8 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Lifestyle Home Garden முசுமுசுக்கையின் மருத்துவ குணங்கள்!

முசுமுசுக்கையின் மருத்துவ குணங்கள்!

பற்றுக் கம்பிகளின் உதவியுடன்,ஏதேனும் ஒரு பிடிப்பைப் பற்றிக்கொண்டு,கொடியாகப் படர்ந்து,பசுமையாக மிதந்து செல்லும் ‘மொசு-மொசு’ படைப்பு,முசுமுசுக்கை..!

 • கண் எரிச்சல்,உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு,½ தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு ½ டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 • பரட்டைக் கீரை, தூதுவளை,முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை,மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.
 • முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும்,கண் எரிச்சல் போக்கும்.இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
 • முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும்,தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.இது சுவாச சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
 • இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை,அப்பம் சுட்டு சாப்பிடலாம்.இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,மனதில் அமைதியின்மை,கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது.
 • முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி,ஆஸ்துமா, காசநோய்,இளைப்பு நோய்,ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
 • வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு,அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 • முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
 • காசநோயால் அவதியுறுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் குணமாகும்.இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக் கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.இதுவும் காச மற்று சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக் கூடியது.
 • ஆஸ்துமா,மூச்சுத்திணறல் குணமாக:
  முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா,மூச்சுதிணறல் குணமாகும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments