28 C
Jaffna
Friday, September 25, 2020
Home Sports Indoor ஒய்வை அறிவித்த பிரபல WWE மல்யுத்த ஜாம்பவான்!

ஒய்வை அறிவித்த பிரபல WWE மல்யுத்த ஜாம்பவான்!

WWE எனும் மல்யுத்த போட்டியில் 30 ஆண்டுகளாக பங்கேற்று வந்த ‘தி அண்டர்டேக்கர்’ என்று அழைக்கப்படும் “மார்க் வில்லியம் கால்வே”( 55 வயது) தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ளார்.

1990ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கில்(WWE) ரெஸ்ட்லராக அறிமுகமானார்.’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரை கொண்டு ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச அளவிலான ரெஸ்ட்லிங் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இந்நிலையில் அண்டர்டேக்கரின் ஓய்வு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது.

கடந்த ஏப்ரல் நடைபெற்ற ரெஸ்ஸில்மேனியா 36 தொடர் முடிவில் அண்டர்டேக்கர் ஓய்வு பற்றி அதிகம் பேசப்பட்டது. ஏனெனில் அந்த போட்டியில் அவர் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு விடை பெறுவது போன்ற காட்சி காட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து அண்டர்டேக்கர் “தி லாஸ்ட் ரைடு” என தொடரில் தன் ரெஸ்லிங் அனுபவங்களை பற்றி பேசி வந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயரின் அர்த்தம் “கடைசி பயணம்” என்பதாகும். அப்போதே ரசிகர்கள் அவர் விடை பெறப் போகிறார் என கணித்தார்கள்.

இது குறித்து இவர் கூறுவதாவது, “என்னுடைய வாழ்க்கையின் இக்காலக்கட்டத்தில் மீண்டும் விளையாட எனக்கு ஆர்வம் இல்லை.

நான் கைப்பற்றவேண்டியது இனி எதுவுமில்லை. நான் சாதிக்கவும் இனி எதுவுமில்லை. இந்த விளையாட்டு மாறிவிட்டது.

மேலும் புதிய வீரர்கள் உள்ளே வரவேண்டிய நேரமிது. இதுதான் சரியான நேரம். இந்த ஆவணப்படம் அதை அறிந்துகொள்ள உதவியது. என்னுடைய அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டது”என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments