28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News Europe பிரித்தானியா மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியா மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தான் உண்மையான ஆபத்து என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரித்தானியாவின் அரசியல் தலைவர்களுக்கு மருத்துவ நிபுணர் குழு கடிதம் எழுதியுள்ளது.

குறித்த கடிதத்தில், பிரித்தானியாவில் கொரோனாவின் எதிர்காலப் பரவல் கணிக்க முடியாத அளவில் உள்ளது.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்டப் பரவல் உண்மையில் ஆபத்தானதாக இருக்கும்.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக,செவ்வாய்க்கிழமையன்று அடுத்தமாதத் தொடக்கத்தில் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை திறக்கப்படும் என்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

சீனா மற்றும் தென்கொரியாவில் கொரோனாவின் முதல்கட்டப் பரவல் முடிந்த நிலையில் இரு நாடுகளிலும் தற்போது இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அங்கு கொரோனா மருத்துவப் பரிசோதனைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments