28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home Lifestyle Food தினமும் வாழை இலையில் சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

தினமும் வாழை இலையில் சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

வாழை மரத்தின் இலை நமது பாரம்பரிய கலாசாரத்தில் உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும்,படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது.

இது விருந்துகள்,விழாக்கள்,திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு ஆகும்.

வாழை மரத்தில் இருந்து கிடைக்கின்ற வாழை இலைகளை நம் முன்னோர்கள் உணவு சாப்பிட பயன்படுத்தி வந்தனர்.ஆனால் இன்று அலுமினிய தட்டுகளில்,பிளாஸ்டிக் தட்டுகளிலும்,சாப்பிட்டு வருதனால் பல நோய்களை நமக்கும் ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் நம் முன்னோர்கள் உணவு சாப்பிட பயன்படுத்தி வந்த இந்த வாழை இலைகளில் உணவு சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  • வாழை இலையில் இருக்கின்ற கிருமிநாசினி வஸ்துக்கள் உணவில் இருக்கின்ற கிருமிகளை அழித்து, நோய்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
  • உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது,வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள்,நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது.மேலும் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.
  • வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு,நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.சாப்பிடப்படும் எப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருட்களும் சுலபமாக செரிமானம் ஆகவும் வழிவகை செய்கிறது.
  • தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும்,சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும்.
  • தினந்தோறும் மூன்று வேளையும் வாழை இலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு தோலில் நீர் வறட்சி ஏற்படாமல்,பளபளப்புத் தன்மை காக்கப்பட்டு,தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து,எப்போதும் இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.
  • வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல்,முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது.
  • வாழை இலையில் சாப்பிட்டு அந்த இலையை எறிந்தாலும்,அவை மண்ணில் விரைவாக மக்கி,நிலத்திற்கு உரமாக மாறுகிறது.எனவே சுற்றுச்சூழலுக்கு மிக நன்மை செய்யக்கூடிய ஒரு பொருளாக வாழை இலை இருக்கிறது.
  • வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது.
  • வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்பட்டு,உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெருபவர்கள் தீக்காயம் பட்ட பகுதியில் வாழை இலையை வைத்து,தினமும் கட்டி வந்தால் வெகு சீக்கிரத்தில் வந்து தீ காயங்கள் ஆறும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments