28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Asia அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் இந்த 3 நாடுகளுக்கு செல்லலாம்!

அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் இந்த 3 நாடுகளுக்கு செல்லலாம்!

கொரோனா பீதியின்றி பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா கடைபிடித்துவரும் தரத்திற்கு நிகராக கோரோனா சோதனைகளும் தொடர்புடைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நாடுகளுடனையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Grant Shapps வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பில் முன்னெடுக்கப்படவிருக்கும் மதிப்பாய்வில் பாதுகாப்பான பயண திட்டம் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

மட்டுமின்றி தேவை இருந்தால் மட்டுமே சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லலாம் என்ற அறிவுறுத்தல் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்,பிரான்ஸ்,ஸ்பெயின்,இத்தாலி,ஜேர்மனி, ஆஸ்திரியா,கிரீஸ், பெல்ஜியம்,நெதர்லாந்து,ஜிப்ரால்டர்,பெர்முடா, மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் அனைத்தும் ‘பாதுகாப்பான நாடுகளின்’ முதல் தொகுப்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆகஸ்டு மாதம் துருக்கி மற்றும் துபாய் செல்ல பிரித்தானியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

நெடுந்தொலைவு பயணங்களுக்கு,அதாவது வியட்நாம்,சிங்கப்பூர் மற்றும் ஹொங்ஹொங் செல்ல கோடையின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை காத்திருக்க நேரும்.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments