28.4 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை யே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர்.இன்னும் அதன் பாதிப்பு அதிகமாகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கிடையில் டிவி,திரையுலகம் சார்ந்த பலர் இறந்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருத்தத்தில் ஆழ்த்தி வருகின்றன.இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளர் மற்றும் திரைப்படக் கலைஞரான எஸ்.நடராஜ சிவம்  காலமானதாக தகவல் வந்துள்ளன.

அன்னாருக்கு வயது 74.வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

நடராஜ சிவம் இலங்கை அரசின் ரேடியோ சிலோன் வானொலி மூலம் பிரபலமாகி பின் திரைத்துறையிலும் பணியாற்றினார்.மேலும் இவர் தமிழ்,சிங்களம் மொழிகளில் நாடகங்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கையை வானொலி உட்பட பல ஊடகங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி குரல் பிரபலமான அப்துல் ஹமீது வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments