28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News Europe பிரித்தானியா வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்!

பிரித்தானியா வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்!

வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் சில தளர்வுகளை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விமான சேவை தடை செய்யப்பட்டது.

அதன் பின் இந்த நோயின் தாக்கம் குறைந்து வருவதால்,ஒரு சில நாடுகளில் விமான சேவை போன்ற போக்குவரத்துகளில் இருந்த தடை நீக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் பரவிவிடக்கூடாது என்பதற்காக, கடந்த 8-ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளும், பிரித்தானிய குடிமக்களுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற விதியை அரசு அறிவித்தது.

பயணிகள் விடுதிகளிலோ அல்லது வீடுகளிளோ 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும்.மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர் சரிவில் இருந்து வருகிற நிலையில் இந்தத் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டால் பிரித்தானியா வருவது பலருக்கும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் பிரித்தானியாவில் சுற்றுலாவுக்கான மாதம் என்பதால் இந்தக் கட்டுபாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இதில் அயர்லாந்து தவிர்த்து பிற நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் விலக்கு அளிக்க பிரித்தானியா பரிசீலித்து வருகிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments