27.8 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News Asia இன்று முதல் கடுமையாக அமுலாகும் நடைமுறை!

இன்று முதல் கடுமையாக அமுலாகும் நடைமுறை!

நாட்டில் முகக்கவசங்கள் அணியாதவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையானது இன்று முதல் கடுமையாக அமுலாகும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரித்துள்ளார்.

அத்துடன்,முகக்கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் ஆராய நாளை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பெரும்பாலானவர்கள் செயற்படுகின்றனர்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 6725 பேர் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

இதனால் இன்று முதல் முகக்கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments