28.9 C
Jaffna
Monday, September 21, 2020
Home News Asia தமிழர்களின் கொடூரமான மரணம்!ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்

தமிழர்களின் கொடூரமான மரணம்!ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்

தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்வி பட்டு கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் பொலிசார் தந்தை,மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர்

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அனைத்து அரசியல் கட்சிகளும் இதனைக் கண்டித்தன.

காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெருமளவில் டிரண்டாகி வருகிறது. தற்போது இது தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவணும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன்.நாம் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங்,படிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம்.இனத்துக்காக,மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம் என்று தெரியாமல் இறந்து விட்டார்கள்,அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல,நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல.மனிதம் எங்கே என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments