28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home News Asia கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல்..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல்..!

ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படமாட்டாது. ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகைக்காகவும்,இதர சேவைகளுக்காகவும் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் 50000ம் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கு தூதரகத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள்.இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன்,நாட்டில் தற்போது உள்ளோர் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இந்த நிலையினை அரசாங்கம் மிகவும், அவதானத்துடனும்,பொறுப்புடனும் கையாள்கிறது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்பார்த்தோம்.ஆனால்,சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்க அமைய தீர்மானம் காலதாமதமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயிலும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான பிரதான மார்க்கமாகும்.

நாட்டுக்கள் வரும் சுற்றுலா பிரயாணிகள் தங்களின் நாட்டில் முதலில் பி. சி. ஆர். பரிசோதனையை செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் அவர்கள் எமது நாட்டுக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரையில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுற்றுலாத்துறை சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே சுற்றுலா பிரயாணிகள் தங்க முடியும் என்றார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments