28.4 C
Jaffna
Wednesday, July 15, 2020
Home News Europe பிரித்தானிய மக்களுக்கு போரிஸ் ஜோன்சான் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானிய மக்களுக்கு போரிஸ் ஜோன்சான் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் இன்னும் பிரித்தானியாவில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

பிரித்தானியாவிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும்,தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வரும் 4-ஆம் திகதி முதல் பிரித்தானிய ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன.இதனால் விதிமுறைகள் பறக்கவிடப்பட்டு கொரோனா பரவல் மேலும் தீவிரமாகும் என அரசு அச்சம் அடைந்துள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு தளர்வு கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜூலை 4-ல் தான் தளர்வுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை வெல்ல வேண்டும்.கொரோனா என்னைத் தாக்காது என்று இளைஞர்கள் சிலர் நினைக்கலாம்.

அது உண்மையாக கூட இருக்கலாம்.ஆனால் உங்கள் மூலம் முதியவர்களை தாக்கலாம்.கொரோனா இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்,அது இன்னும் அழியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில...

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது.இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது.கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான...

காதல் ஆறு வகை – அதில் உங்கள் காதல் எந்தவகை?

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது.காதலுடன் `அவனும்,அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்.பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை.கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,குட்டிக்கரணம் அடிப்பது,கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக்...

பட்லருக்கு இன்னும் வாய்ப்புக்கள் கொடுக்கபட வேண்டும்!

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.அந்த அணியில் பேர்ஸ்டோவும்...

Recent Comments